ggggggவவுனியா மாவட்ட செயலகத்தினால் எமது சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்று வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் ஒரு இலட்சத்து தொண்ணூராயிரம் ரூபா பெறுமதியான 12 புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி அனுசரனையினை புலம்பெயர் உறவுகளான லண்டனைச் சேர்ந்தவர்களான அன்பர் ஒருவரும்(ரூபா 100000) திரு.கந்தசாமி ஞானேஸ்வரன் (ரூபா10000) கனடாவைச் சேர்ந்த தம்பையா சந்திரகுமார் (ரூபா 50000) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமநாதன் ஜனகராஜ் (ரூபா 31800) ஆகியோர் வழங்கியிருந்தனர். இதற்கான வாகன வசதியினை கனடாவிலுள்ள திரு.துரை சண்மகநாதன் அவர்கள் (ரூபா 10000) வழங்கியிருந்தார். கடந்த 17 வருடங்களாக பூந்தோட்ட நலன்புரி முகாமில் இருந்த மக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னடம்பன் மற்றும் பரசன்குளம் கிராமத்தில் மீள்குடியமார்த்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனாலும் பல போக்குவாரத்து வசதியீனம் காரணமாக பாடசாலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமை போன்ற சிரமங்களினால் சின்னடம்பன் கிராம மாணவர்கள் அவர்களது கல்வி நடவடிக்கையில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் இதனைக் கருத்தில் கொண்டு இவ் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு வவுனியா மாவட்டச் செயலாரை கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனை மாவட்டச் செயலகம் எமது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இவ் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஒளியேற்றியுள்ள எமது புலம்பெயர் உறவுகளுக்கு மாணவர்களின் சார்பிலும் மாவட்ட செயலகம் சார்பிலும் எமது சங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

b b2 b3 b4