1513450495solitary L“சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் நேற்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இந்தியன் இல்லத்திற்கு அருகாமையில் நேற்று குறித்த கட்டிடம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர். இந்த சொலிடாரிடி சென்ரர் சட்ட உதவி அலுவலகத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை சம்பந்தமான, ஆரோக்கியமான வேலைச்சூழலில் பால் நிலை சமத்துவம் பேணுதல் தொடர்பான சட்டஉதவிகள் வழங்கப்படும். இந்த நிலையத்தின் சட்ட உதவிகள் தேவையானவர்கள், 021-221-4444 இந்த தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு, சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையம் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்வில், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் உட்பட சட்டத்தரணிகள் பங்கேற்றனர்.