hஅம்பாறை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வீடுகள் மீது, இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, எட்டுப் பேர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் 83 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்கள் கிராமவாசிகள் என அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, பொலிஸார் அப் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.