4555நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டிக்ஓயா நிவ்வெளி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 200 பெண் ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று மயக்கமடைந்த நிலையில் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆடை தொழிற்சாலையில் பெற்றுகொடுக்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் குறித்த ஊழியர்கள் திடீர் மயக்கமுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையான விபரங்கள் இதுவரை வைத்தியர்களால் வழங்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொர்வுட் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.