ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்துறை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவர்கள் தொடர்பான தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பணியாளர்களை உள்வாங்கும்போது வெளிப்படைத் தன்மையுடனும், அந்த நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய பணிக்காக பணியாளர்களை அனுப்பவும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.