ranil wickramasingaதனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் விஜயம் செய்யவுள்ளார். மேலும், ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு, எதிர்வரும் 9ம் திகதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக பின்லாந்துக்கு செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தல், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தல் என்பனவே இந்த விஜயத்தின் நோக்கம் என, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பிரதமருடன் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட குழுவினரும் பின்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளனர்.