national children protectionசிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, கடந்த வருடம் நாடளாவிய ரீதியில், 9,361 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளனவென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மலையகத்திலுள்ள 7 மாவட்டங்களில், 2,277 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென, அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் 271 சம்பவங்களும் கண்டி மாவட்டத்தில் – 407, கேகாலை மாவட்டத்தில் -351,மொனராகலை மாவட்டத்தில் – 252, மாத்தளை மாவட்டத்தில் -307, நுவரெலியா மாவட்டத்தில் -211 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 593 சம்பங்களும் பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 183, அநுராதபுரம் 521, மட்டக்களப்பு 148, கொழும்பு 1271, காலி 635, கம்பஹா 917, ஹம்பாந்தோட்டை 412, யாழ்ப்பாணம் 169, களுத்துறை 558, கிளிநொச்சி 116, குருநாகலை 722, மன்னார் 68, மாத்தறை 307, முல்லைத்தீவு 119,

பொலன்னறுவை 221, புத்தளம் 139, திருகோணமலை 139, வவுனியா 115 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மேலும் ஆபாசமான வெளியீடுகள் தொடர்பில் 5 சம்பங்களும் யாசகத்தில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பாக 329 சம்பவங்களும் கடத்தல் 60, சிறுவர்களை கொடுமைப்படுத்தியமை தொடர்பாக 2180, பாலியல் தொல்லை 713 உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில், பதிவாகியுள்ளனவெனவும் அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.