deadஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்ட குளத்தடியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரை, யானை தாக்கியதில், ஸ்தலத்திலே அக்குடுப்பஸ்தர் மரணமடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 2, பாடசாலை வீதியில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52) என்பவரே, மரணமடைந்தவராவார். இவர், தனது வீட்டில் இருந்து இன்று காலை வேலைக்காச் சென்ற வேளை, குளத்தடியில் வைத்து யானை தாக்குதலுக்கு உள்ளகியுள்ளார். மரணம் தொடர்பான மேலதிக விசாரனைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.