பபுவா நியூகினியாவின் மனூஸ் தீவில் உயிரிழந்த இலங்கை அகதியின் சடலத்தை, நாட்டுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பணம் கோரியதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மனூஸ் தீவில், கடந்த திங்கட்கிழமை, இலங்கை அகதியான ரஜீவ் ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பணம் கோரப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.