2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமது பெறுபேறுகளை தெரிந்து கொள்ளலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு ஹரிஸ்சந்திர மகா வித்தியாலயத்தின் மாணவன் தனுக கிரிஷான் குமார் அதிகூடிய புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அவர் பெற்றுக் கொண்ட புள்ளிகள் 198. 2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 3014 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றிருந்ததுடன், 356,728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 2017ம் ஆண்டில் நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
கொழும்பு – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கம்பஹா – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
களுத்துறை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
கண்டி- 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தளை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
நுவரெலியா – 158 (சிங்களம்) 154 (தமிழ்)
காலி – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மாத்தறை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
ஹம்பாந்தோட்டை – 162 (சிங்களம்) 152 (தமிழ்)
மன்னார் – 158 (சிங்களம்) 153 (தமிழ்)
வவுனியா – 161 (சிங்களம்) 154 (தமிழ்)
முல்லைத்தீவு – 160 (சிங்களம்) 154 (தமிழ்)
அம்பாறை – 159 (சிங்களம்) 154 (தமிழ்)
திருகோணமலை – 158 (சிங்களம்) 152 (தமிழ்)
குருணாகலை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
புத்தளம் – 160 (சிங்களம்) 152 (தமிழ்)
அனுராதபுரம் – 160 (சிங்களம்) 153 (தமிழ்)
பொலன்னறுவை – 160 (சிங்களம்) 151 (தமிழ்)
பதுளை – 160 (சிங்களம்) 153 (தமிழ்)
மொனராகலை – 158 (சிங்களம்) 151 (தமிழ்)
இரத்தினபுரி – 162 (சிங்களம்) 154 (தமிழ்)
கேகாலை – 164 (சிங்களம்) 156 (தமிழ்)
மட்டக்களப்பு – 154 (தமிழ் மட்டும்)
யாழ்ப்பாணம் – 155 (தமிழ் மட்டும்)
கிளிநொச்சி – 154 (தமிழ் மட்டும்)