mark fieldஇரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று இலங்கை வரு­கின்றார். இவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை சந்­திக்­க­வுள்ளார்.

இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ராலயத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. வடக்­கிற்கு விஜயம் செய்யும் பிரித்­தானிய அமைச்சர் அங்கு பல­த­ரப்­பட்ட சந்­திப்­பு­களில் கலந்து கொள்ள உள்­ள­துடன் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட வுள்ளார். பிரித்­தா­னி­யாவின் ஆசிய பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்றும் நாளை வெள்ளிக்­கி­ழ­மையும் நாட்டில் தங்­கி­யி­ருப்பார். இந்த சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாடவுள்ளார். அதே­போன்று யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தின் போது வட மாகாண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­ன­ரையும் சந்­தித்து நிலை­மை­களை அறி­ய­வுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன்­போது வடக்கில் பிரித்­தா­னி­யாவின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­படும் கண்­ணி­வெடி அகற்றும் பணி­களை பார்­வை­யிட உள்­ள­துடன், மீள்­கு­டி­யேற்ற பகு­தி­க­ளுக்கு சென்று அந்த மக்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார்.

நல்­லி­ணக்கம் மற்றும் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் இலங்­கையின் நட­வ­டிக்­கைகள் குறித்து பிரித்­தா­னிய அமைச்சர் தனது விஜ­யத்தில் கூடிய கவனம் செலுத்­தவுள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான வெளிவிவகாரப் பணியகத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.