rtretஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தின் யாழ்.சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவிகள் இருவர் மாவட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

194 புள்ளிகளுடன் உதயகுமார் அனந்திகா முதலிடத்தையும், 193 புள்ளிகளைப் பெற்று மைத்திதேயி அனிருத்தன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன் கல்லூரியின் டிலக்ஷிகா வனராஜன் 191 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர். உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயகுமார் லெவீத் ஆகியோர் 190 புள்ளிகளை பெற்றுள்ளனர். அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் நல்லதண்ணி மறே தோட்டம் வலதள பகுதியைச் சேர்ந்தவராவார். இதேவேளை, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். இதனிடையே, வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருந்தங்கள் குறித்து எதிர்வரும் 20திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.