human rightsதேசிய மனித உரிமைகள் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் 2017-2021 தயாரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவிக்கையில், அமைச்சரவையின் வழிநடத்தலின் கீழ், சரியான வழிகாட்டலின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் 2017-2021 தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. “இந்நிலையில், அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத்திட்டத்தை, அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

அவற்றை செயற்படுத்துவதற்கும், செயன்முறைகள் தொடர்பில்,அவ்வப்போது அறிக்கையிடுவதற்கு அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு, அந்த அறிக்கையை,பகுப்பாய்வு செய்வதற்கு, இடைக்கால அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கும்” அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.