aSasதமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், அரசியலைப்பு சட்டத்திற்கிணங்க அரசியல் சார்பின்றி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவி ஏற்பு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், மக்களவை துணைத்தலைவர், நீதிபதிகள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.