ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேற்று கைது செய்யப்பட்ட 28 பேரும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியமை மற்றும் பொது செத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இவர்கள் 28 பேரும் கைது செய்யப்பட்டனர். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரால் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையில் 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.