நிலச்சரிவு அவதானிப்பு இயந்திரம் ஒன்றை நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு கையளித்துள்ளது. நோர்வேயின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தோர்பஜோன் காஸ்ட்டாஸ்ட்டர் இந்த இயந்திரத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கையளித்துள்ளார். இந்த இயந்திரத்தின் பெறுமதி 55 மில்லியன் ரூபாய்கள் என கூறப்படுகிறது. இலங்கையின் மலைநாட்டு பகுதியில் நிலச்சரிவு தொடர்பிலான பாரிய ஆபத்துக்கள் உள்ள நிலையில், அதற்கு நோர்வே அரசாங்கம் முதன்மையான உதவிகளை வழங்கிவருகின்றது. குறித்த இயந்திரத்தை பயன்படுத்தி நிலச்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.