இலங்கை விமானப்படைக்கு 16 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.