ஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், 14 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டே, அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வார் என்று தெரியவருகின்றது. அவர், தடுப்பு காலவில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கைதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.