jayampathiவடகிழககு இணைப்பு தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அந்த மாகாணங்கள் இணைப்பது சாத்தியமற்ற ஒன்றே என பாராளுமன்ற உறுப்பினரர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் மற்றும் இடைக்காhல அறிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கருத்துரைக்கும் வகையில்நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்லாமில் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமக்கு வரலாற்று சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான இந்த வாய்ப்புக்கு ஒருங்கிணைந்த எதிரணியை தவிர ஏனைய அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். நாட்டில் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனவரி8a மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
அரசமைப்பு தேர்தல் முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே தற்போதும் முயற்சித்து வருகின்றோம். அந்த வகையிலேயே வழிநடத்தல் குழுவினால் இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நாடு பிளவடையும் என்றும் புதிய அரசமைப்பிற்கு எதிராக கோஸங்களை எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் முஸ்லீம்களுக்கான தனியலகு தொடர்பால ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் யோசனைகளை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் முன்வைத்துள்ளன.
ஏவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதே. 1986ம் ஆண்டில் வட, கிழக்கு இணைப்பு பற்றி தொடர்பாக கூறினாலும் நீதிமன்ற உத்தரவு மூலம் அது காலாவாகியுள்ளது. இதனால் மீண்டும் சட்டத்தை கொண்டுவந்து வடக்கு, கிழக்கு இணைப்பை மேற்கொள்வது சாத்தியமற்றதே என அவர் தெரிவித்துள்ளார்