அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தொடர்ந்தும் 16 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இன்றைய தினமும் உணவை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “கைதிகள் மூவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் சிறைச்சாலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் அவர்கள் உணவைத் தவிர்த்து வருகின்றனர்.அவர்களுடைய உடல்நிலை தொடர்பில் மிக அவதானமாகக் கவனித்து வருகிறோம். உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக விசேட வைத்தியர்களையும் நியமித்துள்ளோம்” எனத் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தம்மை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.