namalபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, அஜித் பிரசன்ன ஆகியோருக்கு, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி. சாகன, பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் மூன்று பேர், ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.