ranil finland minister metபின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்தநாட்டின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் பிர்க்கோ மற்றிலாவை சந்தித்துள்ளார். பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில், ரணில் விக்ரமசிங்க தமது நாட்டுக்கு வருகைதந்தமையை விசேடமாக கௌரவிப்பதாக மற்றிலா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனநாயகம், மனித உரிமை, சமூக சமநிலை, கல்வி மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் பின்லாந்திற்கும் இடையில் இருந்துவரும் அடிப்படை, சமமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அபிவிருத்தி மற்றும் தொழிற்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பின்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் இலவச சுகாதார சேவை, இலவச கல்விச் சேவை தொடர்பில் நீண்டகால வரலாறு உண்டு என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த வரலாற்று அனுபவங்களுடன் குறித்த சேவைகளை பயனுள்ளதாக முன்னெடுத்து, தற்போதைய காலத்திற்கேற்ற வகையில் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.