ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யுத்தத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்திருந்த அவர், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவை இன்று சந்தித்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.