அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளார், சுதர்சன குணவர்தனவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ரங்க கலங்க சூரிய, பதவியை ராஜினாமா செய்தமையை தொடர்ந்து குறித்த பதவிக்கு வெற்றிடம் நிலவியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ரங்க கலங்க சூரிய பதவி விலகியமைக்கு தனிப்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாகவே பதவி விலகுவதாக தனது டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.