மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் யுவதிகளுக்கு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமங்களுக்கு தொழில் வழிகாட்டல் எனும் தொனிப்பொருளில் தொழில் வழிகாட்டல் செயல்முறைப் பயிற்சி நேற்று கரவெட்டி, நாவற்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் விதாதா வள நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்த மேற்படி நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று நாடு திரும்பிய மற்றும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு மெழுகுவர்த்தி, சூடம் (பத்தி), காகித உறை தயாரித்தல் உள்ளிட்ட சிறு கைத்தொழில் தொடர்பாக செய்முறை மற்றும் விளக்கமளிப்பு போன்றவை வழங்கப்பட்டது. வவுணதீவு பிரதேச விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி சுனித்தா அகிலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வளவாளர்களாக விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர்களான் எஸ். விக்னேஸ்வரன், திருமதி வீ.நிரஞ்சன், சமுக சேவகர் எம்.சிறிஸ்காந்தராஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே.அருணா, விதாதா வள நிலைய கள இணைப்பாளர் பி.சுகுணரூபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.