Header image alt text

greமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் யுவதிகளுக்கு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமங்களுக்கு தொழில் வழிகாட்டல் எனும் தொனிப்பொருளில் தொழில் வழிகாட்டல் செயல்முறைப் பயிற்சி நேற்று கரவெட்டி, நாவற்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் விதாதா வள நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்த மேற்படி நிகழ்வில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று நாடு திரும்பிய மற்றும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு மெழுகுவர்த்தி, சூடம் (பத்தி), காகித உறை தயாரித்தல் உள்ளிட்ட சிறு கைத்தொழில் தொடர்பாக செய்முறை மற்றும் விளக்கமளிப்பு போன்றவை வழங்கப்பட்டது. Read more

Nama-Rajapaksa-Remand-626x380கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். Read more

fdsfகிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தில் உள்ள இளைஞனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதுடன்,

சிறுவர் இல்ல நிர்வாகிகளையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளானதாக கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. Read more

image_4bfef98cdcதாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை (09) கைதுசெய்யப்பட்ட ‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ்.முனசிங்க, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவருக்கு இன்று வரையிலும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், திங்கட்கிழமை (09) மாலை கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். Read more

irosha silvaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கவர்ஸ் கோர்ப் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான, படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா,

நேற்று கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார். அபுதாபி நகரத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  Read more