“அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.
அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. இன்னும் சில நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தங்களை செய்யும். எனினும், நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாடுகளில் எல்லாம் கைதிகள் இருக்கின்றனர். எனினும், அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் இல்லை. இலங்கையிலும் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.