a1 - Copyவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாக கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு இன்று ரூபா 20,000 பெறுமதியான வீட்டுக்கான 10 கூரை தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தனது விண்ணப்பத்தில், நானும், கணவரும், 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறோம், எங்களது வீட்டு கூரை ஓலையால் அமைந்துள்ளது. தற்போது கூரை பழுதடைந்துள்ளது. பருவ மழை தொடங்குவதால் நாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனது கணவரும் கடந்த கால யுத்தத்தின்போது காலில் காயம் ஏற்பட்டு செல் பீஸ் உள்ளதால் நீண்ட நேரம் கூலிவேலை செய்ய முடியாதுள்ளது. எனவே எங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எமது வீட்டு கூரைக்கான தகரங்களை தந்துதவுங்கள் என கிராம சேவையாளரின் சிபாரிசுடன் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்திற்கு அமைவாக கனடாவைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட அன்பரின் நிதி அனுசரணையுடன் அவர்களுக்கான கூரை தகடுகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (நன்றி – வட்டு இந்து வாலிபர் சங்கம்)

a1 a2