kumarakuruparanதமிழ் தலைவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தாது தவறிளைத்ததாகவே தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரை தமிழ் மக்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசு, இணக்க அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தாது தவறிளைத்ததாகவே தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளது என்பதை தமிழரசுத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் கொங்கிரஸ் பொதுச்செயலாளர் முனைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையானது மனிதாபிமானம் அற்றரீதியில் காலம் கடந்து செல்கின்றது. இன்று அரசிற்கு நல்லிணக்க ஆதரவு நல்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரை தமிழ் மக்கள் வெறுக்கும் நிலைக்கு இது தள்ளிவிட்டிருக்கின்றது என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் வெறுத்த கடந்த மஹிந்த அரசினால் 14000 புலிகள் அல்லது புலி சந்தேகக நபர்கள் புனர்வாழ்வளித்தோ இல்லாமலோ விடுதலை செய்யப்பட முடியுமானால் ஏன் இந்த இருநூற்றுக்கும் குறைவான கடும் புலிகளல்லாத தமிழ் அரசியற்ற கைதிகளை விடுதலை செய்யமுடியவில்லை. இதற்கு வல்லமை இல்லாதவர்களா தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை எனும் எண்ணம் இன்று தமிழ் மக்கள் மனதில் உருவாகுவதத்திற்கு நியாயம் உண்டு.

தமிழ் தலைமை குறிப்பாக சம்பந்தர் ஐயா அவர்களும் சுமந்திரன் அவர்களும் மனம் வைத்தால் பிரதமர் அளவில் பேசப்பட்டு தீர்வு காணப்படமுடியும். அதை விடுத்து சட்டமா அதிபருடனும் நீதி அமைச்சருடனும் பேசுவோம் என்பது காத்திரமான விடயமல்ல என்பதே புத்திஜீவிகளின் கருத்து. தமிழ் அரசியற்ற கைதிகளின் விடுதலை அவர்களின் பொறுமையை இழக்கவைத்துள்ளது நியாயமே.

அரச தலைமையும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமை ஏற்று முன்னிலை வகிப்பவர்களும் இவர்களின் உடனடியான விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். தயவு செய்து அவர்களது மனஉளைச்சல் மனவேதனையை, மனிதாபிமான நிலை நின்று தீர்வு காணுங்கள் எனவும் ஜனநாயக மக்கள் கொங்கிரஸ் பொதுச்செயலாளர் முனைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.