train strike (2)தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று இரவு முதல் பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தன. இந்த திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களில் இருந்து நேற்று இரவு புறப்படவிருத்த பல தொடரூந்து சேவைகள் இரத்தாகியிருந்தன. இன்றுகாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வாவுடன்; இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்தே ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பை மேற்கொள்ள புகையிரத தொழிற்சங்கங்கள் வாய்ப்பை கோரியிருந்தன. எனினும். இன்றுமாலை ஜனாதிபதி செயலருடன் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.