Header image alt text

roshan seneviratneவடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னும் இரண்டு வருடங்களில் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். Read more

pobloவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர்.

ஆனால், அரசு மௌனமாக உள்ளது. ஆகையால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில், கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

kumarakuruparanதமிழ் தலைவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தாது தவறிளைத்ததாகவே தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரை தமிழ் மக்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசு, இணக்க அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தாது தவறிளைத்ததாகவே தமிழ் மக்களை நினைக்க வைத்துள்ளது என்பதை தமிழரசுத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் கொங்கிரஸ் பொதுச்செயலாளர் முனைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Read more