plote & jayampathi 04புலம்பெயர் இலங்கையர் அமைப்பு ஸ்ருட்காட்டில் இன்று சனிக்கிழமை(14.10.17) ஏற்பாடு செய்திருந்த ஜெயம்பதி விக்கிரமரட்ணவுடனான சந்திப்பில் புளொட்டின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெகநாதன் தலைமையில் ஜேர்மன் கிளைத்தோழர்கள் கலந்துகொண்டு இலங்கையில் வரவிருக்கும் புதிய சட்டவரைபு தொடர்பான இடைக்கால வரைபு தொடர்பாக கலந்துரையாடி அதில் தேசிய இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை புதிய ஆலோசனையில் உள்வாங்கப்படவில்லை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இச்சட்டவரைபிலும் இலங்கைத் தேசிய இனமான தமிழர்கள் சார்பாக உரிய முறையில் விடயங்கள் உள்வாங்கப்படாமை பெரும்பான்மை இன நலன்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளமை போன்ற குறைபாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வறிக்கை திருப்தியற்ற நிலையையே ஏற்படுத்தியுள்ளதுஒரு நாடு என்ற வரையறைக்குள் அனைத்து இனங்களும் சமத்துவமாக வாழ சிறுபான இனங்களின் உரிமையை பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒருமித்து வாழக் கூடியதாகவும் அமையவில்லை.

இவ்வளவு காலமும் தமிழர்களால் பலவழிகளிலும் வலியுறுத்தப்பட்ட நியானமான கோரிக்கைகளும் கருத்திற் கொள்ளப்பட்டுதாக தெரியவில்லை.

இவ் இடைக்கால வரைபில் உள்ள குறைபாடுகள், தமிழ்மக்கள் விருப்பம் கோரிக்கை என்பனவற்றை முன்னிறுத்தி வலியுறுத்தி கட்சி சார்பில் கருத்துக்கள் முன்வைப்படன

இவற்றை செவிமடுத்து கருத்துரைத்த ஜெயம்பதி அவர்கள், சிங்கள தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஆராய்ந்து கலந்தாலோசித்து வரைந்த வரைபில் பல நல்ல விடயங்கள்உள்ளடக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடாமல் குறைகளை பேசி இறுதி வரைபை மேற்கொள்ள அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என தனது தரப்பு கருத்துக்களை கூறினார்.

இச்சந்திப்பில் தமிழர் தரப்பில் பல பிரதிநிதிகளும் சிங்களப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இவர்களுடன் ஜேர்மன் நாட்டவர் சிலரும் கலந்து கொண்டனர்.

plote & jayampathi 06plote & jayampathi 04plote & jayampathi 01plote & jayampathi 02plote & jayampathi 03plote & jayampathi 07plote & jayampathi 05