மூன்று நாட்களாக காணமல் போயுள்ள இளம் தாய் மற்றும் இரு சிறுமியர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதான குழந்தையின் தாயான, 19 வயதுடைய வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை மாலை ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக, வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் சிறுமி, இன்று காலை வத்சலா பெரேராவின் கணவருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த சிறுமியின் பெற்றோர், காணாமல் போன மூவரையும் யாரோ அடைத்து வைததுள்ளதாக சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.
இதேவேளை, இவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை வெல்லம்பிடிய மற்றும் கிரான்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில், இவர்களைத் தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.