வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக்கழகம் தனது 41வது ஆண்டின் நிறைவை முன்னிட்டும், தீபாவளி தினத்தை முன்னிட்டும் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (18.10.2017) காலை 9.30 மணிக்கு கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் ரொக்கெட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.வி.ஜோயல் நிரோஷன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர் திரு. வையாபுரிநாதன், கோமரசன்குளம் மகாவித்தியாலய அதிபர் திரு.வரதராஜா, உடற்கல்வி உதவி ஆசிரியர் திரு. நிரஞ்சன், உடற்கல்வி உதவி ஆலோசகர் திரு ரவிச்சந்திரன், புளொட் உறுப்பினர் திரு.சங்கர், முன்னாள் போசகர் திரு குமாரசாமி மற்றும் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இவ் இறுதி போட்டியில் லெவன் ஸ்டார் விளையாட்டு கழகம் எதிர் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகங்கள் மோதின. இதில் லெவன் ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் இறுதி நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் சிறு ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.