சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் நிட்டம்புவ பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை கைதானார்.