வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய மாதாந்த ஆலோசனைக்குழு கூட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் தொடர்பான திணைக்களங்களால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் இவற்றிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், ம.தியாகராசா, இ.இந்திரராசா, வை.தவநாதன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.