tytyஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது 5 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கும் சுயதொழில் உதவி வழங்கும் நிகழவும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காணிப்பிரச்சனை, ஆளடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.