t1 - Copyஎமது புலம்பெயர் உறவுகளான லண்டன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்களான ரவீந்திரன் குணாளன், ரவீந்திரன் குமணன் ஆகியோரால் தமது தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த கால யுத்தத்தினால் பொருளாதார நிலையில் பின்தள்ளப்பட்ட

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுணம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கமைவாக இன்று கணித உபகரண பெட்டிகளை அன்பளிப்பாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளனர். பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்ட மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரண பெட்டிகளை அன்பளிப்பு செய்த லண்டன் வாழ் உறவுகளுக்கு நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம், இவர்களது தாயாரின் ஆத்ம சாந்தி வேண்டி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் இறைவனைப் பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

t1 t2 t3 t4 t5 t7