gotabaya rajapakseசாதாரண தமிழ் மக்களின் தேவை தமிழ் அரசியல்வாதிகளின் தேவையாக இல்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என குறிப்பிட்ட ஒரு தரப்பினர் இருந்தனர். அவர்கள் தற்போது அரசியல் அமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என கூறுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் தேவை சாதாரண தமிழ் மக்களின் அபிலாஷையாக இல்லை. கடந்த காலங்களில் பெருவாரியான விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டனர். அதுவே, நல்லிணக்கத்திற்கான முயற்சி. கடந்த காலத்தில் தீவிரவாதத்திற்காக ஆயுதம் சேகரித்தவர்களின் தேவைக்காக கொண்டுவரப்படும் அரசியல் அமைப்பு எத்தகையதென்பதை புரிந்துகொள்ள முடியும் என கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.