மட்டக்களப்பு, தாழங்குடாவிலுள்ள வீடொன்றிலிருந்து ஆறு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமி (வயது 47) எனும் பெண், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், சடலமாகக் கிடப்பதை கண்ட அவ்வீட்டிலுள்ளவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக பொலிஸ் தடவியல் அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.