ssssஎமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நிவேசன் அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குரவில் தமிழ் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பாடசாலை சீரடை துணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி விண்ணப்பத்தில் பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தின்போது தங்களது பாடசாலையும் பாதிப்புக்குள்ளானதாகவும், இங்கு கல்வி கற்க்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்டுவதற்கு வசதியற்றவர்கள் எனவே தங்களால் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை தந்துதவுமாறு குறிப்பிட்டு இருந்தார். விண்ணப்பத்திற்கு அமைவாக மாணவர்களின் நிலையை கருத்திற் கொண்டு 100 மாணவர்களுக்கு சீருடை துணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ள திரு. நிவேசன் அவர்களுக்கு பாடசாலை சழூகம் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக் கொள்கின்றோம். (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)

k1 k2 k3 k4 k5 k6