colombo railwayகொழும்பு பம்பலபிட்டியில் தொடரூந்தில் மோதுண்டு நபரொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர் இந்திய நாட்டவர் என தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவர், விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.