நாவற்குழி பாலம் ஒன்றை சீரமைக்கும் நடவடிக்கை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, 5 நாட்கள், வடக்கு தொடரூந்து சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே தொடரூந்து சேவை இடம்பெறும் என தொடரூந்து கண்காணிப்பாளர் விஜய் சமரசிங்க தெரிவித்தள்ளார். ஆயினும் கொழும்பிலிருந்து நாவற்குழி வரையான ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நாவற்குழி ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையில் இலங்கை போக்குவரத்து சபையினூடாக விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். நாவற்குழி பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.