000000000000000000வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கனடாவைச் சேர்ந்த நலன்விரும்பிகளினால் தேராவில் கிழக்கு உடையார்கட்டை முகவரியாக கொண்ட தனபாலசிங்கம் சோபனா எனும் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்க்கு ரூபா 208,000 செலவில் புதிய கிணறு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

தனபாலசிங்கம் சோபனா அவர்கள் கடந்த 15.06.2017 ஆம் திகதி தனது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது, தனது கணவன் கடந்த கால யுத்தத்தின்போது காணமால் ஆக்கப்பட்டுள்ளதுடன். மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் கூலித் தொழில் செய்து தனது குடும்பத்தினை கொண்;டு நடத்துவதுடன் தான் மீள்குடியேற்றம் தாமதமாகியதனால் வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை. நிரந்தரமான வருமானம் கூட இன்மையால் அன்றாடம் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன் நிரந்தர கிணறு இன்மையால் குடி நீர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றோம். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தினையும் கல்வியினையும் கருத்தில் கொண்டு எனது விண்ணப்பத்தினை ஏற்று எனக்கான வாழ்வாதார மற்றும் கிணற்றினை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டர்.

இதனை கருத்தில் கொண்ட வட்டு இந்து வாலிபர் சங்கம் கடந்த யூன் மாதம் கனடா வாழ் நலன்விரும்பிகளின் உதவியுடன் ரூபா 150,000 பெறுமதியான வாழ்வதாரமாக கோழிக்கூடு மற்றும் கோழிகள் வழங்கியுள்ளதுடன். இன்றைய தினம் இவ் புதிய கிணறும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இக் கிணறினை அமைப்பதற்கு ரூபா 208,000 நிதி உதவியினை தந்துதவிய கருணை உள்ளங்களான கனடா வாழ் நலன்விரும்பிகளுக்கு பயனாளி சார்பிலும் சங்கத்தின் சார்பிலும் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவர்களும் இவர்களின் குடும்பமும் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம். இன்றைய தினம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள கிணற்றுடன் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இதுவரையும் வன்னி பெரு நில பரப்பிலே போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சுமார் 6 கிணறுகள் கட்டிக்ககொடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

s1 s2 s3 s5