warships-americaஅமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளன.

அத்துடன் சீனா, இந்­தியா, பாகிஸ்தான், தென்­கொ­ரிய போர்க்­கப்­பல்­களும் இலங்கை வர­வுள்­ளன. இலங்கை அர­சாங்கம் ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்ச்­சி­யாக பாது­காப்பு நட்­பு­ற­வினை பலப்­ப­டுத்தி வரும் நிலையில் சர்­வ­தேச நாடு­களின் பாது­காப்பு கூட்டுப் பயிற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில் அமெ­ரிக்­காவின் ஆறு போர்க்­கப்­பல்கள் இந்த மாத இறு­தியில் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டை­ய­வுள்­ளன.  இம்­மாதம் 28ஆம் திக­தியில் இருந்து 31ஆம் திக­திக்குள் இலங்­கையில் கொழும்பு துறை­மு­கத்தை இவை வந்­தடையவுள்ளன. இதில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் மிகப்­பெ­ரிய விமானம் தாங்கி போர்க்­கப்­பல்­க­ளுடன் இணைந்தே ஏனைய கப்­பல்­களும் இலங்கை நோக்­கிய பய­ணத்­தினை ஆரம்­பித்­துள்­ளன. அதேபோல் ஒரு வாரகாலம் இக்கப்­பல்கள் இலங்­கையில் தரித்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்­தி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்கள், சீனாவின் ஒரு போர்க்­கப்பல் மற்றும் பாகிஸ்­தா­னிய போர்க்­கப்பல் ஒன்றும், தென்­கொ­ரி­யாவின் பிர­தான இரண்டு போர்க்­கப்­பல்­களும் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதம் முதல் வாரத்­தினுள் இலங்­கைக்கு வர­வுள்­ளது. வௌ;­வேறு தினங்களில் வருகைதரவுள்ள நிலையில் இந்த போர்க்கப்பல்களுடனும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுக்கவுள்ளனர்.