dqweதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்­றி­யங்கள் அறி­வித்­துள்­ளன.

இப் போராட்டம் தொடர்­பாக அவர்கள் அனுப்பி வைத்­துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வடக்கு, கிழக்கு தழு­விய ரீதியில் அர­சியல் கைதிகள் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து வேட்டை போராட்­டத்தை மேற்­கொள்ள தீர்­மானம் செய்­துள்ளோம். இப் போராட்டத்தில் நாம் அர­சியல் கைதிகள் தொடர்­பாக பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்தே இப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். இதன்­படி அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் அனு­ரா­த­புர நீதி­மன்­றத்­தி­லி­ருந்து உட­ன­டி­யாக வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு அல்­லது யாழ்ப்­பாண நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­படல் வேண்டும். உட­ன­டி­யாக அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுடன் (கொலை, களவு, கற்­ப­ழிப்பு, கடத்தல்) தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுடன் தடுத்து வைப்­பதை நிறுத்தி அவர்­க­ளி­லி­ருந்து வேறு­ப­டுத்தி பாது­காப்­பான சிறை­களில் தங்­கு­வ­தற்கு துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் ஆகிய விட­யங்­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும்.

அதே­போன்று சிறையில் அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளி­னதும் வழக்­குகள் உட­ன­டி­யாக விசா­ர­ணைக்கு கொண்டு வரப்­பட வேண்டும். ஏற்­க­னவே இக் கைதிகள் பல வரு­ட­கா­ல­மாக கிட்­டத்­தட்ட 10 – 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக சிறைத் தண்­ட­னை­யையும், சிறைக்குள் பல சித்­தி­ர­வ­தை­க­ளையும் தண்­ட­னை­யாக அனு­ப­வித்­தமை கார­ண­மாக எந்­த­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி துரித கதியில் “நிபந்­த­னை­க­ளு­மின்றி அற்ற விடு­தலை” செய்­யப்­பட்டு சமூ­கத்­துடன் இணைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட முன்னாள் போரா­ளி­க­ளுக்கு சிறந்த வாழ்­வா­தாரம் மற்றும் தொழில்­வாய்ப்பு என்­ப­வற்றில் அதிக கூடு­த­லான கவனம் செலுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட போரா­ளி­களில் அங்­க­வீ­ன­ராக இனங்­கா­ணப்­பட்­ட­வர்­க­ளுக்கு மிக விசே­ட­மான தொழில்­வாய்ப்பு மற்றும் வாழ்­வா­தார வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும் ஆகிய விட­யங்­களை அர­சாங்கம் துரித கதியில் மேற்­கொள்ள வேண்டும்.

இக் கோரிக்­கை­களை முன்­நி­றுத்­தியே நாம் இன்­றைய தினம் இக் கையெழுத்து போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். இன் ­றி­லி­ருந்து இப் போராட்­டமானது வடக்கு, கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாக இடம் பெறவுள்ளது. இதில் வடக்கில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிழக்கில் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியமும் விபுலா னந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர் ஒன்றியமும் இணைந்து முன்னெ டுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.