ஆசிய வலய நாடுகளின் வனத்துறை ஆணைக்குழுவினது 27வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. 31 நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடரின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவுள்ளார்.
புவி வரைபடத்தில் வனப்பகுதிகளின் நிலவுகை எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறுவதாக வனப் பாதுகாப்பு நாயகம் அநுர சதுருசிங்க தெரிவித்தார். இம்முறை மாநாட்டில் வன மறுமலர்ச்சிக்கு நடவடிக்கைகள் பல எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.