காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக உறுப்பினர்களை தெரிவுசெய்ய அரசியல் அமைப்பு சபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பதாரிகள் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளில் முன் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் என அரசியல் அமைப்பு சபையின் பதில் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது தவிர, மனித உரிமைகள் சட்டம், மனித உரிமைகள் சர்வதேச சட்டம் உட்பட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். விண்ணப்பங்கள் நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பு சபையின் பதில் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.