முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை பாடசாலைக்கு முன்பாக புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் தேடுதல் நடத்தப்பட்டது. நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென கூறப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் கனரக வாகனத்தை பயன்படுத்தி சிறப்பு அதிரடிப்படையினர், வான்படையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.