president iquiry commissionபாரிய ஊழல் மோச­டிகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ர­ணை­கள் ஆணைக்­கு­ழுவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீடிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கை பூர­ண­மாக முன்­வைக்­கவே கால நீ­டிப்பை கோரு­வ­தாக ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் எச்.டபிள்யு குண­தாஸ தெரி­வித்தார்.

ஆணைக்­கு­ழு­வினால் கடந்த இரண்­டரை ஆண்­டு­கா­லப்­ப­கு­தியில் அரச சொத்­துகள் தொடர்­பான 34 பாரிய மோச­டிகள் குறித்த விசா­ர­ணைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. சட்ட நட­வடிக்­கை­க­ளுக்­காக அவை தொடர்­பான 17 அறிக்­கைகள் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. கடந்த ஆட்­சி­யின்­போது இடம்­பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் அதி­கார துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக ஆயி­ரத்து 600 முறைப்­பா­டுகள் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைத்­துள்­ளன. இந்த நிலையில் தமது இறுதி அறிக்கை ஊடாக குறித்த பாரிய மோச­டி­களை எதிர்­கா­லத்தில் தடுப்­பது தொடர்­பான பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தா­கவும், இந்த ஆணைக்­கு­ழுவின் பத­விக்­காலம் எதிர்­வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வர­வுள்­ளது.

இந்­நி­லையில் பத­விக்­காலம் முடிய முன்னர் ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையை சமர்­ப்பிக்­க­வேண்­டி­யுள்­ள­தா­கவும், ஆகவே மேலும் மூன்று மாத காலம் ஆணைக்­கு­ழுவின் பத­விக்­கா­லத்தை நீ­டிக்­கு­மாறும் அவர் கோரிக்கை விடுத்­துள்­ள­துடன்,. ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கை தற்­போது தயார் செய்­யப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை, மத்­திய வங்­கியின் சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி விநி­யோகம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கையளிக்க மேலும் ஆறுவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.